அமெரிக்க (US) கோடீஸ்வரரான எலோன் மஸ்க் (Elon Musk) டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கட்சிக்கு அதிகளவில் நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
இதேவேளை ட்ரம்ப் சார்பில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் America PAC என்ற நிறுவனத்துக்கு மஸ்க் பெரும் நன்கொடை அளித்துள்ளதாக தெரியவருகிறது.
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனை (Joe Biden) மஸ்க் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ட்ரம்பிற்காக பணிபுரியும் America PAC நிறுவனத்திற்கு மஸ்க் எவ்வளவு கொடுத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த அமைப்பு இந்த மாதத்திலேயே நன்கொடையாளர்களின் பட்டியலை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மஸ்க் மற்றும் பிற பணக்கார நன்கொடையாளர்கள் ட்ரம்ப்பை சந்தித்துள்ளனர். ஆனால், இதுவரை மஸ்க் யாரை ஆதரிக்கிறார் என்று பகிரங்கமாக கூறவில்லை.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க…
https://www.youtube.com/embed/_8Q3liPclM0