குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும் இவ் வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கடற்படை விரைந்து சரக்கு கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
மேலும், சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகளையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.