முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! காவல்துறையினரின் அசண்டையீனம்

யாழ்ப்பாணம் (jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 28 வயது இளைஞன் மீதும் அவரது மோட்டார் சைக்கிள் மீதும் வாள்களாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இளைஞனை மறித்து தாக்குதல்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அராலி மத்தி குமுக்கன் குள வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தரை, முச்சக்கர
வண்டியில் வந்த 4பேர் கொண்ட கும்பல் ஒன்று மறித்து அவர் மீது வாளால் வீசியது.

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! காவல்துறையினரின் அசண்டையீனம் | Sword Attack On Family Men In Jaffna

இதன்போது அவர் விலத்திய நிலையில் குறித்த வெட்டு அவரது மோட்டார் சைக்கிள் மீது
சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அந்த குழு அவரது மோட்டார் சைக்கிள் மீது
கம்பிகளாலும் வாளாலும் தாக்குதல் நடாத்திவிட்டு சென்றது.

இவ்வாறு சென்ற குறித்த கும்பல் அராலி மத்தி பகுதியில் மோட்டார்
சைக்கிளில் வந்த இளைஞனை மறித்து தாக்குதல் நடாத்தியது.

காவல்துறையினர் அசண்டையீனம்

இதன்போது குறித்த
இளைஞனின் கையில் வாள்வெட்டு காயமும், உடலில் அடி காயமும் ஏற்பட்டது.

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! காவல்துறையினரின் அசண்டையீனம் | Sword Attack On Family Men In Jaffna

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு
சென்று அங்கு இது குறித்து தெரியப்படுத்தி விட்டு, குறித்த கும்பல் ஊரை விட்டு
இன்னமும் வெளியேறவில்லை நீங்கள் வந்தால் அவர்களை கைது செய்யலாம் என
தெரிவித்தும் காவல்துறையினர் அசண்டையீனமாக செயற்பட்டு அவர்களை வெளியேற்றியதாக
குற்றம் சாட்டப்படுகிறது.

பின்னர் குறித்த இளைஞன் 107 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு
அவர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்திய பின்னரே காவல்துறையினர் இது குறித்து
விசாரணை செய்துவிட்டு சம்பவ இடத்திற்கு சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள்
தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.