பாகிஸ்தானுக்கு(pakistan) எதிராக ராவல் பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ் அணி(bangladesh).
இன்று (25) முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியிலேயே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் 30 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெற்று இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தானின் முதல் இனிங்ஸ்
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இனிங்ஸில் 06 விக்கெட் இழப்புக்கு 448 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
சிறப்பாக ஆடிய பங்களாதேஷ்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தனது முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 565 ஓட்டங்களைப் பெற்றது.
அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம்(Mushfiqur Rahim )191 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் 117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இனிங்சை தொடங்க வேண்டியதாயிற்று.
ஆனால் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்ஸ், பங்களாதேஷ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் 146 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் பங்களாதேஷின் இரண்டாவது இனிங்ஸை விட 29 ஓட்டங்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.
வரலாற்று வெற்றி
இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி இலகுவாக 30 ஓட்டங்களை பெற்று வரலாற்று வெற்றியை பெற்றது.
23 ஆண்டுகால (2001 – 2024) பங்களாதேஷ்-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இரு நாடுகளுக்கும் இடையே இதற்கு முன்பு 13 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன, மேலும் ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்ததைத் தவிர 12 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணி தற்போது டெஸ்ட் விளையாடி வரும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் (1), அவுஸ்திரேலியா (1), இங்கிலாந்து (1), அயர்லாந்து (1), நியூசிலாந்து (2), இலங்கை (1), மேற்கிந்திய தீவுகள் (4), சிம்பாப்வே (8) ஒரு முறையாவது தோற்கடிக்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மட்டும் தோற்கடிக்கப்படாமல் உள்ளன. உள்ளன.