2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்
மேலும், முடிவுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை (தரவு சேகரிப்பு) வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.