முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீட்டின் கூரை பிரித்து
நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை
கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவமானது கடந்த செவ்வாய்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவத்தினத்தன்று இரவு வீட்டின் கூரையினை பிரித்துக்கொண்டு வீட்டிற்குள்
நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சிறுதொகை பணம் மற்றும் இருபது இலட்சம்
ரூபா வங்கியில் வைப்பு செய்யப்பட்ட நிலையான வைப்பு சான்றிதழ்கள், இரண்டு
பவுண் எடையுள்ள நெக்ளஸ் மற்றும் மோதிரம் என்பன கொள்ளையர்களால்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, நேற்றைய தினம் (29) கொள்ளை சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.