முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான கருத்து கணிப்பு

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) நடத்திய கருத்துக் கணிப்பில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் (Kamala Harris) முன்னிலையில் உள்ளார்.

குறித்த கருத்துக் கணிப்பின் படி, கமலா ஹரிஸுக்கு 48 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு (Donald Trump) 47 வீதமான மக்களே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், இதில் 2.5% வீதமான மக்களின் எண்ணங்கள் தேர்தல் நெருங்கும் போது மாற்றமடையலாம் எனவும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய வம்சாவளி நபர் 

எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், அமெரிக்காவை மட்டுமில்லாது சர்வதேசத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலக முன்னர் டொனால்ட் ட்ரம்ப் அதிக வெற்றி வாய்ப்புக்களை கொண்டிருந்தார்.

us-presidential-election-prediction

பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலகி கமலா ஹரிஸை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவித்ததன் பின்னர் நிலைமை மாறியுள்ளது.

ஒருவேளை கமலா ஹரிஸ் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவை ஆட்சி செய்யவுள்ள முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெயரை பெறுவார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இந்நிலையில், தான் வெற்றிபெற்றால் விரிவான எல்லை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கமலா ஹரிஸ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

us-presidential-election-prediction

இது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை மேலும் கடினமாக்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பான ஜோ பைடனின் கொள்கை தொடர்ந்தும் செயற்படுத்தப்படும் எனவும் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.