முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இங்கிலாந்து (UK), இலங்கை (Srilanka) அணிகளுக்கு இடையிலான 3 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 02- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

இங்கிலாந்து அணி

இதற்கமைய, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 இலங்கை
ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

ஜோ ரூட் சதமடித்து 143 ஓட்டங்களில் ஆட்டமிழந்தமை தொடர்ந்து கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ஓட்டங்களிலும் பென் டக்கெட் 40 ஓட்டங்களிலும், ஹாரி புரூக் 33 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலங்கை அணி

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

2வது இன்னிங்ஸ்

இதையடுத்து, 231 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இமாலய இலக்கு

இதையடுத்து, 483 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

தினேஷ் சண்டிமால் 58 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 50 ஓட்டங்களும்
பிரியநாத் ரத்நாயகே 43 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 292 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.