ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, செப்டம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya )தெரிவித்துள்ளார்.
“இந்த திருடர்களுடன் ஒரு நாள் கூட பணியாற்றுவதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது. 22ஆம் திகதி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) எமது நாட்டிற்கு சிறந்த தீர்மானத்தை எடுப்பார், அதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக உள்ளோம் என அமரசூரிய தெரிவித்தார்.
அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக நீக்கப்படுவார்கள்
அவரின் கூற்றுப்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கீழ், அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக நீக்கப்படுவார்கள், மேலும் தேவையான சட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
காபந்து அரசாங்கம் பற்றிய பேச்சுக்கள் மேலும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் முயற்சி என்று நிராகரித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe)ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் குழப்பத்தை ஏற்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
குழப்பத்தை ஏற்படுத்தும் ரணிலின் தேர்தல் பிரசாரம்
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அண்மைக்கால அறிக்கைகள் குறித்து வினவியபோது, ஐந்து கட்டளைகளை பின்பற்றும் திறன் கொண்ட அமைச்சரவையை நியமிக்கும் திறன் குறித்து அமரசூரிய கேள்வி எழுப்பினார்.
“தேரவாத பொருளாதாரம் பற்றி அவர் பேசியுள்ளார், அதற்கு முன் அவர் ஐந்து கட்டளைகளை பின்பற்றும் திறன் கொண்ட அமைச்சரவையை நியமிக்க வேண்டும்” என்று அமரசூரிய கூறினார்.