முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரா ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கத்தை வென்று இலங்கை வீரர் சாதனை

பிரான்ஸில் (France) நடைபெற்றுவரும் பாரிஸ் (Paris) 2024 பாரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு (Samitha Dulhan kodithuwakku) வென்றுள்ளார்.

பாராலிம்பிக்கில் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02) இலங்கை (Sri lanka) நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டி ஆரம்பமானது.

இதில் இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

பராஒலிம்பிக்

தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையை நிலைநாட்டினார்.

இவர் 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

பாரா ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கத்தை வென்று இலங்கை வீரர் சாதனை | Sri Lanka Wins Silver In Javelin At Paralympics

சமித்த துலான் கொடிதுவக்கு தனது முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்திருந்தார்.

ஐந்தாவது முயற்சியில் 64.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை

இப் போட்டியில் இந்தியாவின் மாற்றுத்திறனாளி சுமித் 70.59 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து புதிய பாராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கத்தை வென்று இலங்கை வீரர் சாதனை | Sri Lanka Wins Silver In Javelin At Paralympics

அவுஸ்திரேலியாவின் மாற்றுத்திறனாளி மைக்கல் பியூரியன் (F44 வகைப்படுத்தல் பிரிவு) 64.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பானின் கோபி விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் F64 வகைப்படுத்தில் பிரிவு ஈட்டி எறிதலில் 66.49 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில் பாராலிம்பிக்கில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.