நாடு முழுவதிலும் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த(susil premyantha) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
தண்ணீர், மின்சாரம் இல்லை
நாடளாவிய ரீதியில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் இல்லாத பெரும்பாலான பாடசாலைகளில் நாற்பது அல்லது ஐம்பது மாணவர்களே கல்வி கற்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.