பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்துள்ளார்.
அத்தோடு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரக்ஷா காப்புறுதி
இந்தநிலையில், சுரக்ஷா காப்புறுதி 4.5 மில்லியன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனடிப்படையில் மூன்று வருடங்களுக்கு மாணவர்களுக்காக 7.1 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.