முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேள்விக்குட்படும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்புலமை : எழுத்துப் பிழைகளோடு வெளியிடப்பட்ட கடிதம்

Courtesy: uky(ஊகி)

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப் புலமையை கேள்விக்குட்டுத்தும் வகையில் அத்திணைக்களத்தின் பயன்பாட்டில் இருந்த கடிதம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம் என முகவரியிடப்பட்டு கிளிநொச்சி வடக்கு, கிளிநொச்சி தெற்கு, முல்லைத்தீவு, துணுக்காய்,மடு, மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி அவதானிப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

06.08.2024 என திகதியிடப்பட்ட அந்தக் கடிதம் 2024 ஆம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான இலவசக் கருத்தரங்கு தொடர்பான அறிவுறுத்தல் வழிகாட்டல் கடிதமாக அது அமைந்துள்ளது.

சுட்டப்படும் தவறுகள்

“கிளிநொச்சி” என்பதை கிளிறொச்சி, கிளநொச்சி எனவும் க.பொ.த(சா/த) என்பதில் (க.பொ.த(கா/த) எனவும்

“உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும்”என வரவேண்டிய இடத்தில் உறுதிப்படுத்கொள்ளுமாறும் என தி, க் ஆகிய இரு எழுத்துக்களை விடுத்து அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.

தமிழில் ஒரு நபரின் பெயரைக் குறிப்பிடும் போது அவரது முதலெழுத்தை ஆங்கில பேரெழுத்தில் குறிப்பிடலும் தமிழ் மொழிப் பயன்பாட்டுக்குப் பொருத்தமற்ற அணுகுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேள்விக்குட்படும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்புலமை : எழுத்துப் பிழைகளோடு வெளியிடப்பட்ட கடிதம் | Northern Education Department Tamil Question

இந்தக் கடிதத்தில் உள்ள எழுத்துத் தவறுகள் தொடர்பில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவருடன் உரையாடி அவரது கருத்துக்களும் பெறப்பட்டது.

ஒரு மாகாண கல்வித் திணைக்களம் தனது உத்தியோகப பூர்வ கடிதத்தில் மொழித் தவறுகளை விட்டிருப்பது அவர்களது பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் க.ஜெ.பிறட்லி ஒப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிர்க்க ஒரு வழி 

உத்தியோகப் பூர்வ கடிதத்தில் ஒப்பமிடும் போது அக்கடிதத்தின் மொழித் தவறுகளை சரிபார்த்து, கருத்துத் தவறுகளை சரிபார்த்து, அதன்பின்னரே ஒப்பமிட வேண்டும்.

அலுவலகங்களில், கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயத்தை அதிகாரிகள் குறிப்பிட, அவ்விடம் உள்ளடக்கப்பட்டு, கடிதத்தை ஒருவர் தயாரிக்கின்றார்.அதன் பின்னர் அக்கடிதத்தில் அதிகாரி ஒப்பமிடுகின்றார்.

இத்தகைய அணுகுமுறையினாலேயே இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டு விடுவதாக ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரிடம் இதுதொடர்பில் கேட்ட போது அவர் இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.

இது போன்ற ஒருபக்கக் கடிதங்களை ஒப்பமிடும் போது ஒருதடவை வாசித்து பார்த்து விட்டு ஒப்பமிடலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.