வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இலத்திரனியல் காட்சியறையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று (25.11) காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்து
நாசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டதாக
சந்தேகிக்கப்படும் நிலையில், காட்சியறை முழுமையாக எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் நாசம்
தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை முழுமையான
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும்
பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டிருந்தது.

எனினும் காட்சியறை முழுமையாக தீயில்
எரிந்தமையால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள்
நாசமாகியுள்ளன.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

