தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் என்பன புதன்கிழமை இரவு 11 மணி முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.