15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மரங்கள் இன்று (10.09)
கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார்
தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம், 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக
வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்
பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சோதனை நடவடிக்கை
இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்த போது
அங்கு சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்ட 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட
பெறுமதியுடைய மரங்கள் மீட்கப்பட்டன.
அத்துடன், மரக்காலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின்
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார்
மேலும் தெரிவித்தனர்.