சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தேர்தல் பிரசார மேடையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சாய்ந்தமருதில் (Sainthamaruthu) நேற்று (11) மாலை முன்னெடுக்கப்பட்ட ரணிலின் “இயலும் சிறிலங்கா” பிரசார கூட்டம் நிறைவடைந்த பின்னர் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலைமை உருவானது.
இதனால் ரணிலின் தேர்தல் பிரசார வளாகத்தில் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழு மோதல்
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு கலகமடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஜனாதிபதி ரணிலுடன் முண்டியடித்துக்கொண்டு கை கொடுக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த குழு மோதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.