முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய துணை தூதரக அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு

Courtesy: H A Roshan

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர அதிகாரிகள் மற்றும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (17) மாலை திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் களநிலவரம் 

இதில் யாழ் துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது,  தற்போதைய தேர்தல் களநிலவரம் தொடர்பிலும் இலங்கை – இந்தியா உறவு தொடர்பிலும் நீண்ட நேரமாக பிரதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய துணை தூதரக அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு | Consular Officers Of India Met Trinco Journalists

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடகிழக்கு மக்களின் தாக்கம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றது, சிறுபான்மை இன கட்சிகளின் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் எவ்வாறான தாக்களை செலுத்தப்போகிறார் என்பது பற்றியும் இது சிறுபான்மை சமூகத்துக்கு சாதகமானதா ? பாதகமானதா ? போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

அத்துடன், இலங்கை –  இந்திய தொடர்பில் அரசியல் ரீதியான உறவு சுற்றுலாத் துறை அபிவிருத்தி , ஊடகவியலாளர்களுக்கான எதிர்கால பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ் மக்களுடைய சமூக பொருளாதார பிரச்சினைகள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்