முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh)ஆகியோரை காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தடயவியல் அறிக்கைகள்

இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் ஒரு நிரபராதி எனவும், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அத்தோடு சிலரால் திட்டமிட்டு தான் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல் | Kolkata Doctor Case

இதையடுத்து, அவருக்கு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக DNA மற்றும் தடயவியல் அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து, சந்தீப் கோஷ், மருத்துவமனைின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களை அழித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செயற்பட்ட காவல்துறை

அத்தோடு, அவருக்கு உடந்தையாக செயற்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரையும் சிபிஐ கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல் | Kolkata Doctor Case

இந்தநிலையில், இது குறித்து கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்பத்திலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகும் குற்றச்சாட்டுக்களினால் தொடர் போராட்டங்களை பாரியளவில் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.