முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இளம் பொலிஸாரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற பொறுப்பதிகாரி கைது

யாழ்ப்பாணத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தவறான முறைக்குட்படுத்த முயற்சி செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி, அங்கு கடமை
புரியும், 25 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தரையே இவ்வாறு தவறான முறைக்குட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 6ஆம் மாதம் 8ஆம் திகதி, காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவில் கடமை
புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களை, அவர்களது பொறுப்பதிகாரி, சேந்தாங்குளம்
கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கு பொது நபர்கள் சிலருடன் இணைந்து மதுபான
விருந்தில் ஈடுபட்டுள்ளார்.

முறைப்பாடு

அதன்பின்னர், மதுபோதையில் இருந்த குறித்த பொறுப்பதிகாரியை பொலிஸ்
உத்தியோகத்தர் அழைத்துச் சென்று மல்லாகம் பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்க
வைத்து விட்டு வெளியே வர முயற்சித்துள்ளார்.

இதன்போது, பொறுப்பதிகாரி அறையை பூட்டிவிட்டு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தவறான முறைக்குட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

யாழில் இளம் பொலிஸாரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற பொறுப்பதிகாரி கைது | Investigation Against Officer In Charge In Jaffna

இதனால், கோபமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை
தாக்கிவிட்டு வெளியே வந்துள்ளார்.

இந்த விடயத்தினை அந்த பொலிஸ் உத்தியோகத்தர், சக உத்தியோகத்தர்களுக்கு
தெரியப்படுத்தியவேளை சக உத்தியோகத்தர் ஒருவர் அந்த பிரச்சினையை, பொலிஸ் விசேட
பிரிவினர் முறைப்பாடுகள் செய்யும் ‘IIP’ புத்தகத்தில் பதிவு செய்தனர்.

இதனால், பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக வடக்கு மாகாணத்திற்கு
பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த விசாரணை முறையாக நடைபெறாமல்,
பொறுப்பதிகாரியை பாதுகாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலையிலிருந்து விலகல்

விசாரணை என கூறி குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை காலை 8 மணிக்கு அழைப்பதாகவும்,
அந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு செல்வதற்கு சற்று
தாமதமாகினால், விசாரணைகளை மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பி இழுத்தடிப்பு
செய்வதாகவும் தெரியவருகின்றது.

யாழில் இளம் பொலிஸாரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற பொறுப்பதிகாரி கைது | Investigation Against Officer In Charge In Jaffna

அத்துடன், குறித்த விடயத்தை ‘IIP’ புத்தகத்தில் எழுதிய பொலிஸ் உத்தியோகத்தரும்,
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும், பொறுப்பதிகாரியால்
பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இன்றையதினம், தான்
வேலையிலிருந்து விலகுவதாக எழுதிவிட்டு சென்றுள்ளார் என அறியமுடிகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.