முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் சிவஞானம் சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (
S. Shritharan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

உடனடியாக நடத்துமாறு அழுத்தம்

இதேவேளை, கொழும்பிலுள்ள (colombo) இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இந்தியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் சிவஞானம் சிறீதரன் | Former Mp Sridharan Meets President Anura

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன.

இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபைகளுக்கான தேர்தலையேனும் உடனடியாக நடத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.