ஹமாஸ் (Hamas) அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் கடந்த மாதம் 21 ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இஸ்ரேலிய ஊடகங்கள்
இந்நிலையில், ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தார் அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் கத்தார் மத்தியஸ்தர்களுடன் தொடர்பில் உள்ளார் என்று அல் – அரேபியா மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் ராணுவம்
இதேவேளை, லெபனானின்(lebanon) பெய்ரூட் பகுதியில் நேற்று(07) தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மிக முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சுஹைல் ஹுசைன் ஹுசைனி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர் ஈரானுக்கும்(iran) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆயுதங்களைக் கொண்டு செல்வதில் “முக்கியமான” பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டது.