முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல்

அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து இந்திய (india)புலனாய்வு அமைப்புகளால் இலங்கை(sri lanka) பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று (23) தெரியவந்துள்ளது.

அம்பாறை(ampara) மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பையில் கடலில் நீச்சல் செய்பவர்கள்(sea surfers) அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

அந்த இடம் இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட.

இந்திய புலனாய்வு அமைப்பு 

இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.இது தொடர்பான தாக்குதல் ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல் | Informed Indian Intelligence Arugambe Attack Plan

இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச்(Iraq.) சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பான தகவல்

இதன்படி குறித்த இருவரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல் | Informed Indian Intelligence Arugambe Attack Plan

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா தலைவர்களை லெபனானில்(lebanon) இஸ்ரேல்(israel) கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலை அடுத்து பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல் | Informed Indian Intelligence Arugambe Attack Plan

அறுகம்பை பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்