உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சிலருக்கு திடீரென நினைவு வந்துள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தற்பொழுது திடீரென வலியுடன் பேசும் அரசியல்வாதிகளில் எவ்வித பயனுமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு வார்த்தை பேசாத அரசியல் தலைவர்கள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஒரு வார்த்தை பேசாத அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது அந்த தாக்குதல் குறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தங்களை வீரர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இவ்வாறான நபர்களினால் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பொல்ஹேன பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதணையொன்றில் பங்கேற்ற போது கர்தினால் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.