எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இந்த முறை மேற்கொள்ளப்படாது என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது, 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ.309க்கும், 95 ஒக்டேன் பெட்ரொலின் விலை ரூ.371 ஆகவும் பதிவாகியுள்ளது.
டீசல் விலை
அத்தோடு, வெள்ளை டீசலின் விலை ரூ.286 ஆகவும், சூப்பர் டீசலின் விலை ரூ.331 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் ரூ.183க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.