முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை (Sri Lanka) – பங்களாதேஷ் (Bangladesh) நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பங்களாதேசுக்கு அனுப்ப கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பில் (Colombo) அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் அந்நாட்டு மாணவ இயக்கங்கள்,
எதிர்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மக்கள் திரண்டு கிளர்ச்சி ஒன்று
ஏற்படுத்தப்பட்டு ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

நிறைய கிளர்ச்சியாளர்கள்

அதன்போது நிறைய கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஷேக் ஹசீனாவின்
தலைமையிலான அரசாங்கத்தினால் கொல்லப்பட்டனர்.

ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Demonstration In Colombo Against Sheikh Hasina

இதனால் உக்கிரமடைந்த
கிளர்ச்சியால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான 45 பேர்
இந்தியாவுக்கு தப்பி சென்றனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான
அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள்
தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள்

அதனடிப்படையில், அவரை கைது செய்ய அந்நாட்டு
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்  தப்பிச்சென்ற அவரை இந்தியா (India) அடைக்கலம் கொடுத்து வைத்துக்
கொண்டிருக்கிறது.

ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Demonstration In Colombo Against Sheikh Hasina

அதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மற்றும் ஷேக்
ஹசீனாவையும், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளோர்களையும் உடனடியாக
பங்களாதேசுக்கு திருப்பியனுப்ப கோரியே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்
போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், இது விடயம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக
அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரொன்றையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்