அமெரிக்காவின் (US) 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உடனான ரஷ்யாவின் உறவுகள் மீட்டெடுக்கப்படும் என ரஷ்ய இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமெரின்னாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்ப்பிற்கு தமது வாழ்த்துக்களை கூறிய ரஷ்ய இராணுவ அதிகாரிகள், ட்ரம்ப்பின் பதவியேற்பு விழா நடக்கும் வரை நாம் உக்ரைனில் முன்னேறுவோம் எனவும் கூறியுள்ளனர்.
போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள்
இவ்வாறு, உக்ரைனில் தொடர்ந்து முன்னேறுவதன் மூலம், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடாத்த இலகுவாக இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பதவியேற்ற பின்னர் ட்ரம்ப் அமைக்கவிருக்கும் குழுவுடன் ஆலோசனைகளைத் தொடங்க ஒப்புக் கொள்ளலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.