அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிக்ஸ்வில் நொட்ச் (Dixville Notch) எனும் நகரில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்து தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.
6 வாக்காளர்களை மட்டுமே கொண்ட இந்த நகரில் 3 பேர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் 3 பேர் கமலா ஹரிஸுக்கும் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அனைத்து மாகாணங்களிலும் தற்போது நடைபெற்று வருகின்றது.
வூஹான் ஆய்வகம்
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் கோவிட் தொடர்பான அனைத்து உளவுத்துறை ஆவணங்களும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவரான ரொபர்ட் ரெட்ஃபீல்ட் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட் தொற்று கசிந்திருக்க வேண்டும் என குறித்த மருத்துவர் நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.