முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு (Pathmanathan Sathiyalingam) வழங்குவதென்ற கட்சியின் அரசியற்குழு தீர்மானித்திற்கு மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை ஊழல்
குற்றச்சாட்டுக்கள் நிறைந்த வெறும் 4033 வாக்குகளை பெற்ற சத்தியலிங்கத்திற்கு
வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமந்திரனின் பின்புலத்திலே சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம்
வழங்குவதற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மக்கள் எதிர்பார்த்த
இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காது முன்னதாகவே மாகாண சபை ஆட்சி காலத்தில்
சுகாதார துறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதற்காக அமைச்சு பதவியை இழந்த
சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் பல
விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

தேசியப்பட்டியல் ஆசனம் 

குறிப்பாக சத்தியலிங்கம் இம்முறை தேர்தலில் வெறுமனே 4033 வாக்குகளை மாத்திரமே
பெற்றிருந்தார்.

அவரை விட மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட இளம்
சட்டத்தரணியான செல்வராஜ் டினேஸன் தனது முதலாவது தேர்தலிலே 6518 வாக்குகளை
பெற்றுள்ளார்.

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு | Protest Against Sathyalingam In Mannar

ஆனாலும் தகுதி வாய்ந்த அவருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்காது ஊழல் மூலம்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை சேர்த்தும் பல கோடிகள் செலவு செய்து
தனது பிள்ளைகளை ரஸ்யாவில் மருத்துவ கற்கைக்காக அனுப்பி வைத்துள்ள சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கியுள்ளமை தொடர்பில்
விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசு கட்சிக்கு வன்னியில் வாக்குகள்
குறைந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலில் மொத்தமாக வாக்குகளை இல்லாமல்
ஆக்குவதற்கே சத்தியலிங்கம் போன்ற ஊழல் வாதிகளுக்கு சுமந்திரனின் உதவியுடன்
தேசிய பட்டியல் வழங்குப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் வழங்கும் செயற்பாட்டுக்கு தமிழரசு கட்சி
ஆதரவாளர்கள் மாத்திரம் இல்லாமல் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள்
உட்பட பலர் எதிராக தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.