சுமந்திரனின் வழிநடத்துதலில் தான் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் செயற்படுகின்றார் என யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய பட்டியலினூடாக நாடாளுமன்றம் செல்ல பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தமிழரசுக்கட்சி சார்பில் கையளிக்கப்படவில்லை.
இது கட்சியை, கட்சி தொண்டர்களை, மக்களை, உறுப்பினர்களை என எல்லோரையும் ஏமாற்றும் விதமாக உள்ளது.
இந்த பெறும் தவறை செய்த சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து விலக வேண்டும். ஆனால் அது நடக்காது.
கடந்த 5 வருடமாகவே தமிழரசுக்கட்சி யாப்பை மீறும் விதமாகவே நடக்கின்றது.” என்றார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…
https://www.youtube.com/embed/QDFuaxad4es