யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் 17 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
சிறீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை. யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ரஞ்சித் குமார் நியூட்டன் மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரரான குகதாஸ் மாதுளன் ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை – பங்களாதேஷ் அணி
17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒரநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை சிறீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும்.
17 வயதின்கீழ் இலங்கை குழாம்
கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த இடம்பெற்றுள்ளனர்.