முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 1104 குடும்பங்களைச்
சேர்ந்த 3374 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின்
நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ்
நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.

மேலும் முல்லைத்தீவில் என்றுமில்லாதவாறு காற்றின் வேகம் அதிகரித்து
காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி 

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் வட்டக்கச்சி பெரியகுளம்
பகுதிகளில் வீதிகளை மூடி வெள்ளம் பாய்வதால் மக்களின் இயல்பு நிலை
பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள் | Continued Impacts Of Bad Weather

வவுனியா

வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் வெள்ள நீர் வீதியை மேவி பாய்வதால் ஏ9 ஊடான
போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள் | Continued Impacts Of Bad Weather

குறித்த பகுதியில் சிறிய ரக வாகனங்கள் பல பயணிக்க முடியாத நிலையில்
இரவில் இருந்து நீண்ட வரிசையில் காணப்படுகிறது.

நிந்தவூர் 

கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஓலுவில் களியோடை பாலத்திற்கு
அடுத்ததாக நிந்தவூர் பகுதியிலுள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால்
அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள் | Continued Impacts Of Bad Weather

நுவரெலியா

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும்
வெகுவாக அதிகரித்து வருகின்றது.

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள் | Continued Impacts Of Bad Weather

இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்
மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்
அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள் | Continued Impacts Of Bad Weather

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழையுடன் தாழ்நிலைப் பிரதேசங்களில்
அண்டி வாழும் மக்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச்
சேர்ந்த 49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள் | Continued Impacts Of Bad Weather

இவர்களில் 2100 நபர்கள் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி
நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்