விவசாய நிலங்களை அழிக்கும் வன விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என விவசாய, கால்நடைவள, நீர்பாசன மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாய நிலங்களில் வன விலங்குகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விவசாய செய்கை பாதிப்பு
குரங்குகள் போன்ற விலங்குகளினால் விவசாய செய்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விலங்குகளினால் விவசாயிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பாதிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய விவசாய நிலங்களில் அழிவினை ஏற்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.