யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட செயலகத்தினால் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, நேற்றைய தினம் (11) இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, கடந்த ஆவணி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான சிறுவர் உரிமை
மீறல்கள், சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் நலன் சார் விடயங்கள் தொடர்பாக
ஆராயப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலர், உதவிய அரசாங்க அதிபர், பிரதேச
செயலாளர்கள், தொண்டு நிறுவன அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,
தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அதிகாரிகள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.