நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரசாங்க தோட்டங்களில் இருந்து நாளாந்தம் ஒன்றரை இலட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா சதொச நிறுவன தலைவர் சமிதி பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நேற்றையதினம் (10.12.2024) 80,000 தேங்காய்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேங்காய் விலை உயர்வு
இந்நிலையில் தேங்காய் சந்தை ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச நிறுவன தலைவர் சமிதி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு
காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,
முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன்
தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த
விடயத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. பசளை
விநியோகமும் பெறுகின்றது.
பராமரிப்பு இன்மை
தென்னைக்கு ஒவ்வொரு வருடமும் பசளையிட வேண்டும்.
இரசாயன பசளை கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது. இதனால் பெருமளவு
செய்கையாளர்கள் பசளை விநியோகத்தை மேற்கொள்ளவில்லை.
பீடைகளின் தாக்கமும் காரணமாக விளங்குகின்றது.
[EL5L9
]
தென்னைக்கு தொடர்ந்து நீர்
விநியோகம் செய்ய வேண்டும். சிலர் நான்கு ஐந்து வருடங்களோடு நீர் விநியோகத்தை
நிறுத்துகின்றனர்.
இவ்வாறான சிறந்த பராமரிப்பு இன்மையும் தென்னை உற்பத்தியின் வீழ்ச்சிக்கும்
விலை அதிகரிப்புக்கும் காரணம் எனவும், செய்கையாளர்கள் சரியான முறையில் பசளை
மற்றும் நீர் விநியோகங்களை மேற்கொள்கின்ற போது உற்பத்தியை அதிகரிக்க முடியும்
என தெரிவித்தார்.