திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருக்கார்த்திகை திருநாள் அன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதுடன் அதில் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த தீபத்தை தரிசனம் செய்பவர்களுக்கு பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுவதுடன் மாலை மகா தீபம் ஏற்றுவதற்கு முன்பாக காலையில் பரணி தீபம் ஏற்றியுள்ளனர்.
இந்த பரணி தீபம் ஆனது அதிகாலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து, ஏகன் அனேகனாகவும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்பு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அண்ணமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியின் முழு காணொளி பின்வருமாறு,
https://www.youtube.com/embed/EStb0XzK150