கொழும்புக்கு(Colombo) அருகே போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொத்தட்டுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் சோதனைக்காக சென்றிருந்த கலால் திணைக்கள ஊழியர்கள் அங்கிருந்த பெண்ணொருவரைத் தாக்கி , உடைகளையும் கிழித்துள்ளதாக குறித்த பெண் கொத்தட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஊழியர்களுக்குப் பிணை
அத்துடன் தனது சிறுகுழந்தையையும் கலால் திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவரையும் கைது செய்து நேற்றைய தினம்(20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் கலால் திணைக்கள ஊழியர்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.