யாழ்ப்பாணம் (jaffna)பேருந்து நிலையத்திற்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலையின் சாரதி மற்றும் காப்பாளர் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இன்றையதினம்(24) இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்பேருந்து நிலையத்திற்குள் இனந்தெரியாத இருவர் ஹெல்மெட்,கத்தரிக்கோல் மற்றும் சோடாப்போத்தல்களுடன் வந்துள்ளனர்.இதன்போது காரைநகர் சாரதிக்கு அவரது தலையில் சோடா போத்தலால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு நின்ற காப்பாளர் ஏன் தாக்குதல் நடத்துகின்றீர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு செல்லலாம் என கூறவே அவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் இருவரும் காவல்துறை வருவதை பார்த்துவிட்டு பழக்கடைக்கு பின்னால் உள்ள வேலியால் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.youtube.com/embed/vKnMWX5129A