யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் கடந்த 23ஆம் திகதி சைக்கிளில் அவர் சென்றுள்ளார்.
இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்துள்ள நிலையில் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் தெரியாத நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.