முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் விபத்திற்குள்ளான முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

Courtesy: பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த நரடாசா நாகராசா (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த எட்டாம் திகதி மகள் வீட்டுக்கு செல்வதற்காக கல்வியங்காடு – ஜமுனா வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை

பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அந்த வீதியில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்த நிலையில் அவருக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது கல்வியங்காடு பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியபோது, குறித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் நின்ற குறித்த நபர்மீது தாக்கியது.

யாழில் விபத்திற்குள்ளான முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு | Elderly Man Tragically Dies In Jaffna Accident

இந்தநிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சையின் பின் (10.12.2024) அன்று வீடு சென்றுள்ளார்.

இருப்பினும், இன்று (25) காலை வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு – பு.கஜிந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்