சந்தீப் ரெட்டி வங்கா
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. முதல் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், இப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. மிகவும் பிரபலமான நடிகையாம்
இதில் ஹிந்தியில் ரீமேக் ஆன அர்ஜுன் ரெட்டி படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். இப்படம் உலகளவில் ரூ. 900 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றியடைந்தது.
சொத்து மதிப்பு
அடுத்ததாக பிரபாஸ் உடன் கைகோர்த்துள்ள இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, ஸ்பிரிட் எனும் படத்தை இயக்கவுள்ளார். இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்காவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 300 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் அனிமல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ. 100 கோடியாக உயர்த்திவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.