மன்னார் வளைகுடா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் இன்றையதினம்(12.01.2025) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால்
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீதவான் உத்தரவு
இதனையடுத்து, இன்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட
நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் கடற்றொழிலாளர்களை ஒப்படைத்தனர்.
இதன்போதே, குறித்த 8 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.