அண்மைய நாட்களாக மட்டக்களப்பு (Batticaloa) வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம்
அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள கால்நடைகளையும் இந்த முதலைகள் வேட்டையாடி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலைகளின் நடமாட்டம்
இந்தநிலையில், இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு- அமிர்தகழி தீப்பாலத்திற்கு
அருகாமையில் உள்ள வாவியில் பசுமாடு ஒன்றை முதலை பிடித்து செல்லும் காட்சி
அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ,குறித்த மாட்டை முதலை இன்று பிடித்திருக்கலாம் என அந்தப் பகுதியிலுள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.