யாழ்ப்பாணம் – புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் அடங்கிய
குடும்பத்தவருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்
மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த இளைஞர்கள்
இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் அதிவேகமாக
பயணித்த இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே தலையில் ஏற்பட்ட காயத்தினால் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணை
எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு
காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

