முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய்! இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம்

ஹபரண – பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத  ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 10 மாத ஆண் குழந்தை மர்மமாக உயிரிழந்துள்ளதாக  நேற்றையதினம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மரணத்திற்கு காரணமான தாய் 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் மரணத்திற்கு, அதன் தாயார் தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய்! இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம் | Mother Commits Murder Of 10 Month Old Baby  

புலனாகம – பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில், தாய் மற்றும் தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குழந்தை வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு(16) தந்தை வெளியே சென்ற சமயம் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குழந்தையின் தாயார் இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர் குழாய்க்குள் குழந்தையை அமிழ்த்தி விட்டு பின்னர் மீண்டும் கட்டிலுக்கு கொண்டு வந்து  கிடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை அந்த தாயார் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர், இது ஒரு கொலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய்! இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம் | Mother Commits Murder Of 10 Month Old Baby

மேலும், சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயாரான 34 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணகைளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்