கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(2) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர(Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று(20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை
இதேவேளை, தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கிழக்கு மாகாணத்தில் 5,086 குடும்பங்களைச் சேர்ந்த 14,806 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.