ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியை நிறுவி, மீதமுள்ள திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அறிவித்துள்ளார்.
இந்த முயற்சி, வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை நவீனமயமாக்குவதையும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் இலங்கையை ஒரு முக்கிய பங்களிப்பாளராக நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1 மில்லியன் மெட்ரிக் தொன் மொத்த சேமிப்பு திறன் கொண்ட 99 தொட்டிகளைக் கொண்ட திருகோணமலை வளாகம், 1960களில் ஒரு பிரித்தானிய நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்டதில் இருந்து பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எண்ணெய் விநியோகம்
எனவே, மாகாண எண்ணெய் விநியோகத்திற்காக 24 தொட்டிகள் CPCக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், 9 – 10 தொட்டிகள் இந்திய எண்ணெய் கழகத்தால் (IOC) நிர்வகிக்கப்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, “இந்த தொட்டிகளை நிர்வகிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியை நிறுவுவது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்த வசதிகளை மேம்படுத்துதல், கச்சா எண்ணெயை சுத்திகரித்தல் மற்றும் உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காக சேமித்து வைத்தல் என்பனவற்றின் மூலம் இலங்கையை சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
[6YEPSAD