காசா(gaza) போர் நிறுத்த ஒப்பந்தம் நிலைநிறுத்தப்படும் என்பதில் தனக்கு “நம்பிக்கை இல்லை” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(donald trump) தெரிவித்துள்ளார்.
நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அது எங்கள் போர் அல்ல, இது அவர்களின் போர். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.
பலவீனமடைந்துள்ள ஹமாஸ்
இருப்பினும், ஹமாஸ் “பலவீனமடைந்து”விட்டதாகவும், காசா ஒரு “பெரிய இடிப்பு தளம்” போல் இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
திட்டம் முன்னேறினால் காசாவுடன் “அழகான விஷயங்களைச் செய்ய முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இது கடலில் ஒரு அற்புதமான இடம் … உங்களுக்குத் தெரியும், எல்லாம் நன்றாக இருக்கிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.