அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தனக்கு ஓவல் அலுவலகத்தில் விட்டு சென்ற கடிதத்தில் உள்ள விடயங்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப், சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளதுடன் பைடன் குறித்த கடிதத்தை தனது கைப்பட எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “ஜனாதிபதி ட்ரம்ப், இந்த புனிதமான பதவியிலிருந்து நான் விடைபெறும் வேளையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்து…
வரலாற்றின் தவிர்க்க முடியாத சிக்கலான நிலைத்தன்மைக்காக அமெரிக்க மக்களும் உலகெங்கிலும் உள்ள மக்களும் அமெரிக்காவை நாடுகின்றனர், மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் நமது தேசத்திற்கு செழிப்பு, அமைதி மற்றும் கருணை நிறைந்த காலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.
நமது இந்த நாட்டை நாங்கள் நிறுவியதிலிருந்து சீராக வழிநடத்தியது போல் கடவுள் உங்களை ஆசீர்வதித்து உங்களை வழிநடத்தட்டும்” என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பைடனின் இந்த கடிதம் தமக்கு உத்வேகம் தரும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முன்னதாக பைடனிடம் குறித்த கடிதம் பற்றி கேட்ட போது அதனை அவர் மறுத்திருந்ததுடன் அது தனக்கும் ட்ரம்பிற்கும் இடையிலானது என குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டு ட்ரம்ப் பதவியில் இருந்து சென்ற போது அவர் பைடனுக்கு தனது கடிதத்தை விட்டுச் சென்றிருந்தார்.