முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவுசெய்யப்படாத தொலைதொடர்பு சாதனங்களை அவை செயல்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) பதிவு தேவைப்படும் கத்திரியக்க
அதிர்வெண்ணை (RF) உமிழும் சாதனங்களை, இன்று (28) முதல் இலங்கை தொலைத்தொடர்பு
ஒழுங்குமுறை ஆணையகத்தில் (TRCSL) பதிவு செய்யப்படவேண்டும்

இல்லையேல், அவை செயல்பட அனுமதிக்கப்படாது என்று ஆணையகத்தின் பணிப்பாளர் ஏர்
வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் அறிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகள், கம்பி தொடர்பற்ற வலையமைப்புகள், ட்ரோன்கள் மற்றும்
ரேடார் மற்றும் பல்வேறு தொழில்துறை மற்றும் மருத்துவ பயன்பாடுகள் உட்பட
கத்திரியக்க அலைகளின் மின்காந்த ஆற்றல் (EME) உமிழும் சாதனங்கள்
சட்டப்பூர்வமாக செயல்பட வேண்டுமானால், அவை பதிவு செய்யப்பட வேண்டும் என்று
அவர் கூறியுள்ளார்.

சரியான அனுமதி

இந்த உத்தரவுக்கு இணங்க, பயனர்கள் தொடர்புடைய மாதிரி எண்ணை வழங்குவதன் மூலம்
சரியான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Imei

இந்த புதிய திட்டத்தின் கீழ் உயர்தர, சான்றளிக்கப்பட்ட மின்னணு சாதனங்களை
உறுதி செய்வதை ஆணையகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களை வாங்குவதால்
எழும் பல சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஆணையக பணிப்பாளர்
கூறியுள்ளார்.

இந்த முயற்சி, இலங்கையில் சட்டவிரோத இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும்,
பாதுகாப்பை மேம்படுத்தவும், கைகளில் எடுத்துச் செல்லும் மொபைல் சாதன
கண்காணிப்பை ஒழுங்குபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் கிடைக்கும் கணிசமான எண்ணிக்கையிலான மின்னணு சாதனங்கள் ஆணையகத்தில்
பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அத்தகைய சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு கணிசமான
வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை 

எனவே, சட்டவிரோத வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதும், பதிவு
செய்யப்படாத மின்னணு சாதனங்களை நுகர்வோருக்கு இறக்குமதி செய்து விற்பனை
செய்வதைத் தடுப்பதும், தமது ஆணையகத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும்
பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Imei

இதேவேளை இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்யப்பட்ட மொபைல் சாதனங்களை அடையாளம்
காண, தமது ஆணையகம் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்தும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் கொண்டு வரும் மின்னணு
சாதனங்கள், புதிய அமைப்பால் பாதிக்கப்பட மாட்டாது.

ஒருவர், IMEI-இயக்கப்பட்ட RF-உமிழும் சாதனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்தால்
அல்லது கொண்டு வந்தால், அவற்றை, ஆணையகத்தின் இணைய அமைப்பு மூலம் பதிவு செய்து
கொள்ள வேண்டும்.

இந்தத் தேவை, தொலைத்தொடர்பு இயக்குனர் வலையமைப்புகளுடன் ஏற்கனவே
இணைக்கப்பட்டுள்ள IMEI-இயக்கப்பட்ட RF-உமிழும் சாதனங்களுக்குப் பொருந்தாது.

15 இலக்க எண்

IMEI என்பது ஒவ்வொரு தொலைபேசிக்கும் ஒதுக்கப்படும் ஒரு தனித்துவமான 15 இலக்க
எண்ணாகும்,

இது பொதுவாக, மின்கலம் அகற்றப்படும் போது சாதனத்திற்குள் காணப்படும்.

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Imei

இது
கையடக்க தொலைபேசியின் கீபோட்டில் *#06# ஐ உள்ளிடுவதன் மூலம் இது தொலைபேசித்
திரையிலும் காட்டப்படும்.

IMEI எண், ஒரு மொபைல் சாதனத்தின் சந்தைப்படுத்தல் பெயர் மற்றும் உற்பத்தியாளரை
தனித்துவமாக அடையாளம் காட்டுகிறது.

இதேவேளை, கையடக்க தொலைபேசியின் IMEI எண்ணைச் சரிபார்க்க விரும்பும்
பயனர்கள், கீழே காட்டப்பட்டுள்ள வடிவத்தில் 1909 க்கு ஒரு குறுஞ்செய்தியை
(SMS) அனுப்பலாம்.

“IMEI [இடைவெளி] 15 இலக்க IMEI எண்கள்.”

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.